Header Ads



பசிலை ஜனாதிபதி வேட்பாளராக்க முயற்சி, தடுப்பதில் ரணில் தீவிரம்


தேர்தல் அறிவிக்கப்பட்டால், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு அந்த முன்னணியின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராகும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.


பசில் ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை விரைவில் திரும்பப் பெறத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


பசில் ராஜபக்ச அதிபர் வேட்பாளராக வருவதைத் தடுப்பதற்காக, நாடாளுமன்றத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்கள் குழுவை தம் பக்கம் இழுக்கும் நடவடிக்கையை ரணில் விக்ரமசிங்க தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.


இதன்படி அமைச்சர் பதவிகள் மற்றும் ஏனைய சிறப்புப் பதவிகளை எதிர்பார்த்து பெருமளவிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


தேசிய மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1 comment:

  1. 225 பேர் கொண்ட கள்ளக்கூட்டத்தை சுகபோக ஆடம்பரமாக வாழவைக்கவும் அந்த கள்ளக்கூட்டத்துக்கு விரும்பியவாறு பொதுச் சொத்துக்களையும் அரச உடைமைகளையும் விற்கவும் அவற்றுக்கான கமிசன்களை விரும்பியவாறு சூறையாடவும் பாராளுமன்றம் என்ற ஒரு கள்வர்கள் கூடும் மடம் இலங்கையில் இயங்குகின்றது. அதனை நடாத்த மாதத்துக்கு கோடான கோடி பணத்தை பொதுமக்கள் வழங்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.