ஐக்கிய மக்கள் சக்தியை சிதறடிக்க, பெரும் அரசியல் சூழ்ச்சி - எதிர்க்கட்சித் தலைவர்
ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இந்த அரசாங்கத்துடன் கூட்டுச் சேராது. அவ்வாறு கூட்டுச் சேருவதற்கான எந்தவொரு கலந்துரையாடலும் கட்சிக்குள் இடம் பெறவில்லை.*#கட்சியை பலவீனப்படுத்தும் விதமாக செயற்படும் நபர்கள் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு அழைக்கப்படுவர்.
அரசாங்கத்திலுள்ள பலவீனங்கள் இயலாமைகள் ஆற்றாமைகளை மூடிமறைக்க இன்று எதிர்க்கட்சியில் பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை சிதறடிக்கும், குழுக்கலாக பிரிக்கும் பெரும் அரசியல் சூழ்ச்சி அரச தரப்பினரால் முன்னெடுக்கப்படுவதாகவும்,போலிச் செய்திகளை உருவாக்கி,போலிச் செய்திகளை செய்தியறிக்கைகளிலும், அச்சு ஊடகங்களிலும்,இலத்திரனியல் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு New Plant செய்து, அந்தப் போலிச் செய்தியை தினமும் காலையில் பகிர்ந்து ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைப்போவதாக மக்கள் மனங்களில் பதிவதற்கு முற்சிக்கின்றனர்.
எக்காரணத்திற்காகவும் ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்துடன் இணைப்போவதில்லை எனவும்,200 மில்லியனுக்கு துணைபோகும் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு.
Post a Comment