அனுரகுமார, சஜித் அரசாங்கத்திற்காக காத்திருக்க வேண்டாம்
ராஜபக்ஷர்கள் உகண்டாவுக்கு பணம் கொண்டு சென்றிருந்தால், ஜனாதிபதியும் அரசாங்கமும் தலையிட்டு பணத்தை அதே விமானங்களில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு, அனுரகுமார திஸாநாயக்கவின் அல்லது சஜித் பிரேமதாஸவின் அரசாங்கம் வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு பணத்தைக் கொண்டுவந்தால் சர்வதேச நாணய நிதியத்துக்கு பின்னால் சென்று அரச நிறுவனங்களை விற்பனை செய்யத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அந்தப் பணத்தைக் கொண்டுவர சிரிலங்கன் விமானம் எங்கள் அதிகாரத்திலில்லை. அது மட்டுமன்றி அங்கு கொண்டு சென்ற அத்தனை ஆவணங்களையும் சுட்டெறித்து வி்ட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி யார் எங்கே போய் பணத்தைக் கேட்பது. அந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நீர் அல்லது உமது தந்தை அல்லது உமது குடும்பம் தற்போது உகண்டாவுக்கு அல்லது நைஜீரியாவுக்குப் போய் வந்தால் எமது அரைவாசி சந்தேகங்களும் நீங்கிவிடும். உமக்கோ உமது குடும்பத்தில் யாருக்கும் உகண்டாவில் காலடி எடுத்த வைக்காமல் தேவையானவற்றை அங்குள்ள பெரிய கள்ளன்கள் செய்து முடித்துவிட்டார்கள்.
ReplyDeleteஉண்மை எது பொய் எது என மக்கள் அறிய முடியாதுள்ளது.
ReplyDelete