Header Ads



பேரீத்தம் பழம் வழங்கப்பட்ட பள்ளிவாசல்களின் பெயர்ப்பட்டியல்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பேரீத்தம் பழம் வழங்கப்பட்ட பள்ளிவாசல்களின் பெயர்ப்பட்டியல்.


பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு மேற்கூறிய தகவல்களுக்கு அமைய பேரீத்தம்பழம் கிடைக்கப்பெறாது இருப்பின் உடனடியாக திணைக்களத்தின் 0112667909 இலக்கத் தொலைபேசி ஊடாக கே.ஏ.சப்ரியை தொடர்பு கொள்ளுமாறு முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளர் இஸட்.ஏ.எம். பைஸல் கோரிக்கை விடுத்துள்ளார்.



2 comments:

  1. 1996 -97 ஆண்டு காலப்பகுதியில் ஏற்கனவே சவூதி அரேபியா அரசாங்கம் 100 மெ.தொன் பேரீத்தம் பழத்தை இலங்கைக்கு வழங்கி வந்தது. அது 96 ஆண்டு சந்திரிகா ஆட்சி காலத்தில் பவுஸி அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் 200 மெ.தொன் பேரீத்தம் பழம் இலங்கைக்கு வழங்கப்பட்டது. அவற்றை அப்போதிருந்த முஸ்லிம் கலாசார திணைக்களம் இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களுக்கும் போதியளவு பகிர்ந்து வழங்கியது. அப்போது வீணாப் போன அரசியல் அதில் தலையிடவில்லை. 25 வருடங்களுக்குப் பிறகு அந்த தொகை ஐந்து மடங்காக அதிகரித்து சுமார் 1000 மெற்றிக் தொன் பேரீச்சம் பழம் இப்போது கிடைத்தால்தான் அவற்றை பத்து இலட்சம் முஸ்லிம்களுக்கு ஓரளவு போதுமான முறையில் இலங்கை முழுவதும் பகிர்ந்தளித்திருக்க முடியும். ஆனால் தற்போது பஞ்சத்துக்காக 50 மெற்றிக் தொன் பேரீத்தம்பழத்தை இலங்கைக்கு அனுப்பி அவற்றைப் பாவித்து அரசியல் அரங்கில் நாடகம் நடிக்க 30 மெற்றிக் தொன் ஈத்தம்பழத்தை சவூதி அரேபிய தூதரகம் தன்னகத்தே வைத்துக் கொண்டால் அது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை அழகாக நாடகம் நடிக்க அத்துறையில் அனுபவம் இல்லாத புதிய பணிப்பாளர் திரு பைஸல் அவர்களை சவூதி அரேபிய தூதரகத்துக்கு அழைத்து பெரிய ஆரவாரத்துடன் 20 தொன் ஈத்தம்பழத்தை கையளித்து அழகாக போடோ எடுத்து பத்திரிகைகளிலும் ஏனைய ஊடகங்களிலும் பகிரங்கப்படுத்தி கடைசியில் திரு பைஸல் அவர்கனை மானபங்கப்படுத்தி கேவலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர் சிறந்த நிர்வாகி, குறைந்தது 150,000 பேர் கொண்ட 70 பள்ளிவாயல்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால் அங்கு வாழும் ஒரு குடும்பத்துக்கு கிடைப்பது 0.00466 கிராம். சுருங்கச் சொன்னால் ஒரு பேரீத்தம் பழத்தின் 100 இல் ஒரு பகுதிதான் ஒரு குடும்பத்துக்குக் கிடைக்கும். இந்த கேவலத்தை இறுதியில் பணிப்பாளர் தலையில் கட்டுவதற்கு ஏன் இந்த வீணாப் போன தூதரகமும் சோனக மந்தி(ரி)களும் செயல்படுகின்றது என்பது தான் புரியவில்லை. குறைந்தது 30 முதல் 40 பள்ளிவாயல்கள் கூட்டாகவோ அல்லது தனியாகவோ சவூதி வௌிநாட்டு அமைச்சுக்கு இது பற்றி முறையிடலாம். மிகவும் சிறந்த வழி கலாசார அமைச்சருடன் பணிப்பாளர் கலந்தாலோசித்து இந்த பேரீத்தம் பழம் இதன் பிறகு எங்களுக்கு அவசியமில்லை என சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு அறிவித்தால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இல்லாவிட்டால் அநியாயமாக முஸ்லிம்களின் சிந்தனையை சிதைக்கும் தேவையற்ற ஆராய்ச்சியில் முஸ்லி்ம்களை ஈடுபடவைக்கும் பெரிய பாவத்தையும் பணிப்பாளர் சுமக்கவேண்டிவரும்.

    ReplyDelete
  2. இதன்பிறகு கிடைத்ததைப் பிரித்துக் கொடுத்து முஸ்லிம்களின் ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கட்ட வேண்டாம் என பணிப்பாளரை நாம் வேண்டிக் கொள்கின்றோம். அந்த முஸ்லிம் சோனக கலாசாரத் திணைக்களத்தின் உள்ளேயிருக்கும் ஊழல்களும் அடிமுடி வேலைகளும் இன்னும் தெரியவந்தால் திரு பைஸல் அவர்கள் அங்கிருந்து ஓடிவிடுவார் என நாம் நம்புகின்றோம். அதைக் கள்வர்களுக்கும் ஊழல்மிக்கவர்களுக்கும் தான் வழிநடாத்தலாம். அந்தப் பணியை நிறைவேற்ற திரு பைஸல் அவர்கள் பொருத்தமாக இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.