Header Ads



சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயாரென ரணில் கூறினாரா..??


ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என அதிபர் கூறியுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


சஜித்திற்கு பிரதமர் பதவி வழங்கத் தயார் என அதிபர் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.


சிறுபான்மை கட்சிகளுடன் அதிபர் நடத்திய சந்திப்பின் போது இந்த விடயம் கூறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த நேரத்திலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சிறுபான்மை கட்சிகள் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


தனித் தனி நபர்களாகவோ தனிக் கட்சிகளாவோ அன்றி சஜித் தலைமையிலான ஒட்டுமொத்த ஐக்கிய மக்கள் சக்தியும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதே பொருத்தமானது என அதிபர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.