Header Ads



முதியோர்களா..? அவதானம்..! முட்டாள்களாக செயற்பட்டு, மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்..!


👉🏼 அவர்கள் பெரும்பாலும் படுத்திருப்பது போல் இருப்பார்கள், ஆனால் உறக்கம் இருக்காது!!!


👉🏼 சாப்பிட்டுவது போல் இருப்பர்கள், ஆனால் ஜீரணிக்காமல் இருக்கும்!!!


👉🏼 சிரிப்பது போல் காட்டிக்கொள்வார்கள், ஆனால் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள்!!!


👉🏼 புன்னகைக்கு கீழால் கண்ணீரை மறைத்து வைத்திருப்பார்கள்!!! 🙏 முதியோர்களா? அவதானம்! முட்டாள்களாக செயற்பட்டு மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்!!!


👉🏼 நீங்கள் அவர்களை விட்டும் விலகிச் செல்வது, அவர்களுக்கு வருத்தம் அளிக்கலாம்!!!


👉🏼 அவர்களின் பக்கத்தில் இல்லாமல் இருப்பது அவர்களை காயப்படுத்தலாம்!!!


👉🏼 அவர்களிடம் இருந்து கொண்டே அவரகளை கவனிக்காமல் இருப்பது அவர்களை நோவினைப் படுத்தலாம்!!! 🙏 முநியோர்களா? அவதானம்! முட்டாள்களாக செயல்பட்டு மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்!!!


👉🏼 முன்னொரு காலம் அவர்கள் வீட்டின் தூண்களாக இருந்திருப்பார்கள், இப்போது அவர்கள் அப்படியல்ல!!!


👉🏼 முன்னொரு காலம் அவர்கள் தைரியமானவர்களாக இருந்திருப்பார்கள், ஆனால் இப்போது அவர்கள் அப்படியல்ல!!!


👉🏼 முதியோர்கள் ஆண்டவனுக்கு நெருக்கமானவர்கள், அவர்களின் பிரார்த்தனைகள் ஆண்டவனிடம் எடுபடவல்லது!!!


👉🏼 அவர்களின் இதயங்கள் காயங்கள் பட்ட பலகைகள், அவர்களின் மனங்கள் இன்னல்களால் மடிக்கப்பட்ட ஏடுகள்!!!🙏 முதியோர்களா? அவதானம்! முட்டாள்களாக செயற்பட்டு மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்!!!


👉🏼 அவர்கள் பலசாலிகளாக இருக்கும் போது அவர்களை வெறுப்பூட்டிய வர்த்தைகள் இப்பபோது அவர்களை காயப்படுத்தும், அவர்களை அப்போது காயப்படுத்திய வார்த்தைகள் இப்போது அவர்களை சாகடிக்கும்!!!🙏 முதியோர்களா? அவதானம்! முட்டாள்களாக செயற்பட்டு மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்!!!


👉🏼 அவர்களுக்கு இனி எப்போதுமே ஓய்வு நேரம்தான், அவர்களின் பேச்சை  யாராவது கேட்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்! அதனால் அவர்கள் அகமகிழ்வடைவார்கள்!! 🙏 முதியோர்களா? அவதானம்! முட்டாள்களாக செயற்பட்டு மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்!!!


👉🏼 வாழ்கை என்ற கடுகதி ரயில் அவர்களை  செளகரீகம் என்ற ஸ்டேஷனிலிருந்து எடுத்துச் சென்று அசெளகரீகம் என்ற ஸ்டேஷனில் கொண்டு வந்து விட்டுள்ளது. அவர்கள் இப்போது மேலுலக பயணத்துக்காக காத்திருக்கிறார்கள்!!!


👉🏼 அவர்களின் முகத்தில் புன்னகையுங்கள்,  கனிவான வார்த்தைகள் அவர்களின் காதுகளை எட்டவையுங்கள். அக்கரையாக அவர்களின் நெற்றிகளில் முத்தமிடுங்கள்!!!🙏 முதியோர்களா? அவதானம்! முட்டாள்களாக செயற்பட்டு மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்!!!


👉🏼 அவர்கள்தான் தாய் தந்தையர்கள், தாத்தா, பாட்டிகள் மற்றும் வயதான பிற உறவினர்கள்!!!


👉🏼 அவர்களின் எஞ்சிய நாட்களை  மகிழ்ச்சியாக வாழ வையுங்கள் அவர்களின் இரவுகளை பிரகாசமான இரவுகளாக மாற்றிவிடுங்கள்!!!


👉🏼 வாழ்க்கை என்ற புத்தகத்தை அவர்கள் மனத்திருத்தியோடு மடித்து வைக்க உதவுங்கள். காலம் கடந்து வரும் ஞானம் போல அவர்கள் மறைந்து பின்னர்  வருந்தும் நிலைக்கு ஆளாகாதீர்கள்!!!


👉🏼 அவர்கள் இழந்தவற்றுக்கு நீங்கள் இழப்பீடாக மாறிவிடுங்கள்!!! அவர்களின் இலையுதிர் காலத்தை வசந்த காலமாக மாற்றிவிடுங்கள்!!! அவர்களின் எஞ்சிய காலத்தில் ஊன்றுகோலாக நீங்களே மாறிவிடுங்கள்!!!🙏முதியோர்களா? அவதானம்! முட்டாள்களாக செயற்பட்டு மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்


👉🏼 முதியோர்கள் மீது ஆண்டவனின் ஆசீர்வாதம் உண்டாகட்டும், முதியவர்களை கனிவுடன் கவனிப்பார்கள் மீதும் ஆசிர்வாதம் உண்டாகட்டும்!!!


👉🏼 அவர்கள் இப்போதைய முதியவர்கள். விரைவில் புறப்படுவார்கள். நீங்கள் 


நாளைய முதியவர்கள், விரைவில் அந்த இடம் வந்துவிடுவீர்கள் என்பதை மறக்காதீர்கள்!!! 🙏முதியோர்களா? அவதானம்! முட்டாள்களாக செயற்பட்டு மூதேவிகளாக மாறிவிடாதீர்கள்!!!


✍ தமிழாக்கம் / Imran Farook

No comments

Powered by Blogger.