Header Ads



நாட்டில் ஆண்களுக்கு அச்சுறுத்தல் - நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து விடயத்தை கூறிய பொலிஸார்


பண்டிகைக் காலங்களில் நகரங்களுக்கு செல்லும் ஆண்களை தனிமையான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களிள் பொருட்களை கொள்ளையடிக்கும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கெசல்வத்தை பொலிஸார் நேற்று -11-  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.


பெண்கள் மற்றும் ஆண்களைக் கொண்ட கும்பல் ஒன்றே இந்த மோசடியை நடத்துவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பொருட்களை எடுத்துச் செல்ல வரும் வர்த்தகர்கள், பல்வேறு கார்களில் கொழும்பு நகருக்கு வரும் இளைஞர்கள் உட்பட பலர் இந்தக் கொள்ளை கும்பலிடம் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நகரங்களுக்கு வரும் ஆண்களிடம் இரகசியமாக பேசி அவர்களை பாலந்டைந்த இடங்களுக்கு அழைத்து சென்று கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது.


இந்த கும்பலுடன் தொடர்புடைய ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஆண்கள் இந்த கும்பலிடம் அவதானமாக இருக்குமாறும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.