"ஒவ்வொரு பெருநாள் போதும், என்னை கவர்ந்தது..."
நான் இஸ்லாத்தை ஏற்று 13 வருடம் ஆகிறது அல்ஹம்துலில்லாஹ்.
அதில் பல பெருநாளை பார்த்திருக்கிறேன்.... ஒவ்வொரு பெருநாள் போதும் என்னை கவர்ந்தது ஒன்று கூடிய கூட்டம் ஒரே தொழுகையில்,
பிடித்தவர் பிடிக்காதவர் அனைவர் முகத்திலும் கட்டி அணைத்து புன்னகைப்பது...
அதிலும் ஊரில் உள்ள மக்களின் அந்த புன்னகை தோழமை கூட்டம் ஒன்றாக இணைந்து ஒரு போட்டோ போடுவாங்க பாருங்க அல்ஹம்துலில்லாஹ் அருமையாக இருக்கும்...
சொந்தங்களோடை இணைந்து ஆங்காங்கே எங்கும் கண்குளிர்ச்சியாக நம் கூட்டம் தாடியுடன் பர்தாவுடன் தெரியும்..
ஒரு சிறிய வருத்தம், எனக்குதான் சொந்தம் இல்லை என் பெற்றோர்கள் முஸ்லிம் அல்ல😭..
தனிமையில் யாரையும் ஒதுக்கி வைக்காதிர்கள் அரவணையுங்கள், அன்போட பழகுங்கள், எல்லாம் சிறிது காலமே, பிறகு அந்த கபூரும் நம்மை அழைத்துவிடும்.
ரிஸ்வான் பின் ராமச்சந்திரன்
Post a Comment