உடல் எடை குறைப்பு சிகிச்சையால், பறிபோன இளம்பெண்ணின் உயிர்
ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் ஷானன் போவ் (28). இவர் தனது உடல் எடையை குறைப்பதற்காக துருக்கியில் அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
சிகிச்சையின் ஒரு பகுதியாக பெண்ணிற்கு இரைப்பை பேண்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இரப்பை பேண்ட் அறுவை சிகிச்சை என்பது வயிற்றின் அளவைக் குறைக்க ஒரு பேண்ட் பயன்படுத்தப்படும் ஒரு செயல்முறை ஆகும்.
இது, உணவு உட்கொள்ளும் அளவை குறைக்க வயிற்றின் மேல் பகுதியில் பேண்ட் வைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த அறுவை சிகிச்சையின்போது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது மரணத்தை வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். மேலும், போவின் காதலன், ரோஸ் ஸ்டிர்லிங், தனது காதலிக்கு பேஸ்புக்கில் அஞ்சலி செலுத்தி உள்ளார். அதில் "என் தேவதையே நீ தூங்கு.. என்றென்றும் உன்னை நேசிக்கிறேன்," என்று குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment