ஹேமா எடுத்துள்ள முடிவு
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு ரீதியாக முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒரு உத்தியோகபூர்வ இல்லம் அரசாங்கத்தினால் வழங்கப்படும்.
அவர் இறக்கும்போது, அவரது மனைவிக்கு அந்த உத்தியோகபூர்வ வீட்டை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஹேமா பிரேமதாச குறித்த வீட்டை பெற்றுக்கொண்டார்.
எனினும், ஹேமா பிரேமதாச கொழும்பில் உள்ள அந்த உத்தியோகபூர்வ இல்லத்தை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கத்திடம் அவர் ஒப்படைத்துள்ளார்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment