'ஏன் இவ்வளவு சாதம் சமைக்கிறாய்?'
பின்வத்தை வடுபாசல் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் தனது தாயுடன் வந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
தீக்காயங்களுடன் சிறுமி நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபர் இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, “ஏன் இவ்வளவு சாதம் சமைக்கிறாய்?” எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
Post a Comment