புத்தர் சிலையை வைத்தவர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
வவுனியா, செட்டிக்குளத்தில் நேற்று -09- திடீரென புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
செட்டிகுளம் – மன்னார் வீதியில், செட்டிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பழைய புகையிரத நிலையம் முன்பாக வீதியோரத்தில் சிமெந்து கற்களை அடுக்கி சுமார் ஒன்றரை அடி உயரமுடைய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
பின்னர் புத்தர் சிலையை வைத்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என இனங்காணப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த புத்தர் சிலையும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
Post a Comment