Header Ads



இலங்கைக்கு வந்து குவியும் ரஷ்யர்கள்


2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 335,679 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.


இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தகவலின்படி, மார்ச் 2022 இல் பதிவான 106,500 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில், 2023 மார்ச் 1 முதல் 31 வரை மொத்தம் 125, 495 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.


2023 ஜனவரியில் 102,545 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ள நிலையில், பெப்ரவரி மாதத்தின் சுற்றுலாப் பயணிகளின் வருகையான 107,639 இலிருந்து இது 11.5% அதிகரிப்பு ஆகும்.


இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான முன்னணி மூலச் சந்தையாக ரஷ்யா இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இருப்பதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


கடந்த மூன்று மாதங்களில் 100,000 சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை தொடர்ந்து பதிவு செய்துள்ளது.

No comments

Powered by Blogger.