பௌசிக்கு எதிராக நடவடிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
மேலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சியே தீர்மானித்துள்ளது எனவும் தெரியவருகின்றது.
மேற்படி யோசனை மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
எனினும், இந்த விடயத்தில் கட்சி முடிவை மீறி வாக்கெடுப்பில் பங்கேற்று யோசனைக்கு ஆதரவாக பௌசி வாக்களித்தார்.
இந்நிலையிலேயே பௌசிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment