கொள்ளை கும்பலை வழிநடத்திய தம்பதி
கொள்ளையர்கள் கும்பல் ஒன்றை வழிநடத்திய கணவன், மனைவி இருவரையும் கொட்டதெனிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இத் தம்பதியினர் இக் கும்பலை வைத்து வீடுகல் மற்றும் கடைகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாக பொலிஸ் நிலையத்திற்க்கு தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 44 மற்றும் 53 வயதுடைய குருணாகல் பகுதியை சேர்ந்த இத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களிடம் இருந்து 4 தங்க மோதிரங்கள், ஒரு தங்க சங்கிலி, எரிவாயு கொள்கலன், உணவுப் பொருட்கள் எனபனவும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment