இங்கிலாந்து - லெஸ்டரில் இலங்கை, முஸ்லிம்களின் சந்திப்பு (படங்கள்)
ஆயிரக்கணக்கான லெஸ்டர் வாழ் அனைத்து நாட்டு முஸ்லிம்களும் விக்டோரியா பார்க்கில் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டாலும் , இஸ்லாஹ் நிறுவனத்தின் பின்திடலிலும் பெருநாள் தொழுகை இடம்பெறுவது வழமை. நம்மவர்களுடன் சேர்ந்து பல வெளிநாட்டவர்களும் பெருநாள் திடல் தொழுகையில் கலந்து சிறப்பிப்பர்.
இஸ்லாஹ் நிறுவனம் 12 இலங்கை சகோதர்ர்களால் உறுவாக்கப்பட்டு இங்கிலாந்து சட்டத்தின் படி பதிவு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுவது குறிப்பிடப்பட வேண்டிய விடயம்.
இம்முறையும் ஈகைப் பெருநாள் தொழுகை திடலில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தாலும் , கடும் மழை காரணமாக கட்டிடத்தின் உள் பகுதிக்கு மாற்றப்பட்டது. லெஸ்டரிலே வசிக்கும் பெரும்பாலான இலங்கை முஸ்லிம்களை இவ்விடத்தில் காணக்கூடியதாக இருந்தது. தொழுகையின் பின் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி முஷாபஹா செய்து கொண்டதும், வாழ்த்துக்களை பரிமாறியதும் , அங்கு வழங்கப்பட்ட தேனீரும் சிற்றூண்டியும் கண்கொள்ளா காட்சியாக தாயக நினைவுகளை மனக்கண் கொண்டு வந்தது.
இம்முறை இஸ்லாஹ் சென்டரில் இடம்பெற்ற எல்லா தராவீஹ் மற்றும் கியாமுல்லைல் தொழுகைகளும் இங்கு பிறந்து வளர்ந்த காபிழ்களான எமது சந்ததியினராலேயே இமாமத் செய்யப் பட்டிருந்தமை பாராட்டப்பட வேண்டியதும் அவர்களுக்கான சமூக அங்கீகாரமாகவும் பார்க்கப்பட வேண்டிய ஓர் முன்மாதிரியாகும்.
நன்றி.
Post a Comment