'அதிகளவான முஸ்லிம்கள் வசிக்கும், பகுதிகளில் விசேட கவனம்'
பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தினால் பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
அதிகளவான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் பண்டிகையை வார இறுதியில் கொண்டாடவுள்ளார்கள்.
இதேவேளை, நோன்புப் பெருநாள் குறித்து தீர்மானிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசல் இன்று மாலை கூடவுள்ளது.
Post a Comment