Header Ads



பொதுஜன பெரமுன ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, இதனை எவராலும் அசைக்க முடியாது


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எம்முடனேயே உள்ளார், இந்த ஆட்சியை எவராலும் அசைக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், 


மொட்டுவின் ஆட்சியில் ஜனாதிபதியும், பிரதமரும்தான் பதவி விலகினார்கள். ஆனால், புதிய ஜனாதிபதி, புதிய பிரதமருடன் 'மொட்டு' ஆட்சி தொடர்கின்றது.


ரணில் விக்ரமசிங்க, தினேஷ் குணவர்த்தன ஆகிய இருவரும் எனது சிறந்த நண்பர்கள். ஜனாதிபதி, பிரதமர் பதவிகளை வகிக்கும் அவர்களுக்கு எமது கட்சியின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும்.


பிரதமர் தினேஷ் குணவர்த்தன எமது கட்சியின் மூத்த உறுப்பினர். அவரின் பதவியை நாம் பறிக்கவுள்ளதாக சில ஊடகங்கள் விஷமத்தனமான பொய்ச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதற்குப் பின்னால் எதிர்க்கட்சியினர் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.


1 comment:

  1. ஆம் எவராலும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அசைக்க முடியாது. உங்கள் குடும்ப ஆட்சி இன்னும் ஆயிரம் வருடங்கள் தொடரும். உங்களுக்காக வால்பிடித்த சோனிகள் கூறியது போல உங்கள் ஆட்சி பிர்ஔனுடைய ஆட்சியை விட பவராக இருக்கும். நாம் எல்லோரும் பொறுமையாக இருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.