இலங்கைக்கு வழங்கப்பட்ட சீனாவின் பெறுமதிமிக்க அன்பளிப்பு (படங்கள்)
சீன அரசாங்கத்தினால் 80 மில்லியன் அமெரிக்க டொலரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு இலங்கைக்கான சீன தூதுவரால் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
எட்டு மாடிகளைக் கொண்ட புதிய வெளிநோயாளர் பிரிவு 49,150 சதுர மீட்டர்களைக் கொண்டுள்ளது.
கதிரியக்க பிரிவு, புற்றுநோய்ப் பிரிவு, அறுவை சிகிச்சை மையம், நரம்பியல் அறுவை சிகிச்சை நிலையம், வெளிநோயாளர் அறுவை சிகிச்சை நிலையம், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல சிகிச்சை நிலையங்கள் வெளிநோயாளர் பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன.
Post a Comment