முஸ்லிம்களின் உடல்களை எரித்தமை தவறு - அமைச்சர் கெஹெலிய
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் கேள்வி எழுப்புகையில், "அன்று கோவிட் மரணங்கள் குறித்து கவனம் செலுத்த கோவிட் மரணங்களை எரிக்க, புதைக்க விசேட அதிரடிப் படையினர் குழுவொன்று நிறுவப்பட்டது. அவர்களது அன்றைய விவாதமாக இருந்தது.
கோவிட் வைரஸ் ஆனது நிலத்தடி நீரினால் பரவும் என்பதாகும்.அது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத ஏனைய சகோதரர்களையும் பெரிதும் பாதித்த ஒன்றாகும்.
இறந்தவர்களின் உடலை தொலை தூரத்திற்கு அதாவது ஓட்டமாவடிக்கு கொண்டு சென்று, அதுவும் அடிப்படையே இல்லாத வெறும் இனவாத அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை நாம் அறிவோம்.
அதனை தாங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த கேள்விக்கு, 'உண்மையில் நான் அப்போது சுகாதார அமைச்சராக இருக்கவில்லை மாறாக அன்றைய காலம் நான் ஊடக அமைச்சராகவே இருந்தேன். உங்கள் கருத்துக்களை நான் மதிக்கிறேன். அது தவறானது என கெஹெலிய ரம்புக்வெல்ல பதிலளித்துள்ளார்.
Post a Comment