Header Ads



பொதுஜன பெரமுனவுக்கு புதிய தலைவர் நியமனம்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவராக பேராசிரியர்  உதுராவல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.


இன்று (22) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் அவரது நியமனம் ஏகமனதாக வழங்கப்பட்டதாக கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 2023 ஆம் ஆண்டுக்கான பொதுக் கூட்டம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆரம்பமானது.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸுக்கு கட்சியின் செயலாளர் கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும், அவர் இன்று கூட்டத்தில் பங்கேற்க மறுத்துவிட்டார்.


இதனால் இன்றைய கூட்டம் கட்சி தலைவர் இன்றி நடைபெற்றது. அதன்பின், அக்கட்சிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.


1 comment:

  1. இந்தக் கட்சியின் தலைமை ஏற்கும் இவர் அவருடைய சங்கை ஆடையைக் களைந்து மொட்டு அரசியலில் சேர்ந்திருந்தால் இலங்கையில் பௌத்தத்துக்கு ஒரு மரியாதை கிடைத்திருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.