Header Ads



வீரவசனவின் அப்பட்டமான பொய்கள் - ஜூலி சுங்


இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், அண்மையில் அமெரிக்காவுக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.


குறித்த குற்றச்சாட்டுகள் ‘அடிப்படையற்றது’ என்று ஜூலி சங் தமது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர், அண்மையில் வெளியிட்ட நூலில் ‘புனைக்கதை’ என்ற அளவில் அப்பட்டமான பொய்களை பரப்பியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


75 ஆண்டுகளாக, அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் ஒரு கூட்டாண்மை மற்றும் எதிர்காலத்தை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்புகிறோம்’ என்று அவர் கூறியுள்ளார்.


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசனவினால் அண்மையில் வெளியிடப்பட்ட நூலில் 2022ஆம் ஆண்டில் ராஜபக்ஷ குறித்த சர்ச்சைகள் தொடர்பாக அமெரிக்காவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார்.


இந்த குற்றச்சாட்டை மறுக்கும் வகையிலேயே ஜூலி சங்கின் கருத்துக்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.