Header Ads



சதியினாலே மகிந்த விலகினார், அரகலயவினர் கைக்கூலிகள் - எதிர்காலத்தில் அம்பலமாக்கப்படுவர்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியது போன்று நாட்டில் சதி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


சதிகாரர்கள் எதிர்காலத்தில் தேசத்திற்கு அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


முன்னதாக ராஜபக்சவை ஆட்சியில் இருந்து அகற்றியது, மூன்றாம் தரப்பு ஒன்றின் சதி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தளம் மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 


இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மூன்றாம் தரப்பு சதியின் கைக்கூலிகள். அதை மக்கள் பின்னர் புரிந்து கொள்வார்கள்.


கோட்டா வீட்டுக்கு போ என்று கூறியவர்கள், அடுத்த ஜனாதிபதியாக பிரதமராக இருக்கும் மகிந்தவே வருவார் என்பதை தெரிந்திருந்தார்கள்.


எனவே தான் அவர்கள், கோட்டாபய பதவி விலகுவதற்கு முன் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.


எனவே இந்த விடயத்தில் மூன்றாம் தரப்பின் சதி இருப்பதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.