கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஒருவருட நிறைவு - உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்த போராட்டக்காரர்கள்
கோட்டாபய அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்றுடன் -09- ஒரு வருட காலத்தை கடந்துள்ள நிலையில் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முகமாக சர்வமத தலைவர்களும் அழைக்கப்பட்டு காலி முகத்திடல் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டது.
காலி முகத்திடல்,ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை ஆகிய பகுதிகளையும் முடக்கி அரசாங்கத்துக்கு எதிராக கடந்த வருடம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தின் காரணமாக இலங்கை அரசாங்கத்தில் மாபெரும் மாற்றமொன்று நிகழ்ந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் தனிப் பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற ஜனாதிபதியை பதவியிலிருந்து வெளியேற்ற அனைத்து மக்களும் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்ட நாள் இன்றாகும்.
Post a Comment