யா அல்லாஹ் இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக..!
அளவற்ற அருளானே! நிகரற்ற அன்புடையோனே! உனக்கே புகழனைத்தும்.
அண்ணல் நபி அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தாரின் மீது
"ரப்பே!நான் தோற்கடிக்கபட்டுவிட்டேன்
எனக்கு உதவுவாயாக" என்ற நூஹ்நபியின் அழைப்பை ஏற்று நபி அவர்களையும் அவர்களைப் பின்பற்றியோரையும் காப்பாற்றிய கருணையாளனே!
"எனக்கு அல்லாஹ் போதுமானவன்.
அவன் பொருப்போற்றுக் கொள்வதில் சிறந்தவன்" என்ற இப்ராஹீம் நபியின் அழைப்பால் சுட்டெரிக்கும் நெருப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்றியவனே!
"நாம் மாட்டிக்கொண்டோமே! என்று மூஸாநபியின் உம்மத்தவர்கள் அஞ்சியபோது "என் ரப் என்னுடன் இருக்கிறான் அவன் எனக்கு வழிகாட்டுவான்" என நம்பிக்கையுடன் சொன்ன மூஸாநபிக்காக ஆர்பரிக்கும் கடலைப் பிளந்தவனே!
"ரப்பே!நான் அநியாயக்கார்களில் ஒருவனாக ஆகிவிட்டேன் என்னை மன்னித்து விடு"என இறைஞ்சிக் கேட்ட யூனுஸ் நபியை மீன் வயிற்றிலிருந்து காப்பாற்றியவனே!
"என் ரப்பே ! என்னை நோய் கடுமையாக பீடித்திருக்கிறது நீ கருணையாளர்களில் மிகச் சிறந்த கருணையாளன் என உன்னை அழைத்த அய்யூப் நபியை துன்பத்திலிருந்து காப்பாற்றியவனே!
"என் ரப்பே ! எனக்கு உதவி அளி! எனக்கெதிராக யாருக்கும் உதவியளிக்காதே !
எனக்காகத் திட்டமிடு என்க்கெதிராக யாருக்காகவும் திட்ட மிடாதே" என்று உன்னிடம் இறைஞ்சிய எங்கள் கண்மணி நபிகள் பெருமானார் அவர்களை
سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ
இந்தக் குழு அதி விரைவில் தோல்வி அடைவதையும், அனைவரும் புறமுதுகிட்டு ஓடுவதையும் காணலாம்.
(அல்குர்ஆன் : 54:45) என நபித் தோழர்களுக்கு முன் அறிவிப்பு செய்யவைத்து பத்ரு களத்தில் வெற்றியை அளித்தவனே!
அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்த வல்லவனே!
அல்லாஹ்வே! இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறோம்.
உலகமெங்கும் பல்வேறு துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகி இருக்கும் முஸ்லிம்களைக் காப்பாற்றி அருள்வாயாக!
எங்கள் நாட்டில் எங்களையும் அடையாளங்களையும் அழித்திட திட்டமிடுவோர்களிடமிருந்து எங்களைக் காப்பாயாக!
எங்களில் சிறையில் வாடுவோர் விரைந்து விடுதலை யாக அருள் புரிவாயாக!
எங்களின் ஈமானை உறுதிப்படுத்துவாயாக!
துன்பங்களைத் தாங்கிடவும் எதிர்த்துக் களம் காணவும் எங்களின் உள்ளங்களுக்கு ஆற்றலைத் தருவாயாக!
கொடிய நோய்களிலிருந்து எங்களையும் எங்கள் நாட்டினரையும் உலக மக்களையும் காப்பாற்றுவாயாக!
எங்களின் கடன்களை நிறைவேற்றுவாயாக!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கும் உனது ரசூலுக்கும் கட்டுப்பட்டவர்களாக வாழ்ந்து அந்நிலையிலேயே எங்களின் ஆன்மாவைக் கைப்பற்றுவாயாக
இந்தப் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!
ஆமீன்.
Post a Comment