யாழ்ப்பாணத்தில் இப்படியும் நடந்தது
இந்த சம்பவம் யாழ் உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைக்குலை வெட்டிய திருடனை கணவர் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
திருடனை இளைஞர்கள் சிலரிடம் ஒப்படைத்து பொலிசாரிடம் கொண்டு செல்ல குடும்பஸ்தர் ஆயத்தமாகியுள்ளார் . இந்நிலையில் வாழைக்குலை களவெடுத்த கள்ளனை இளைஞர்கள் தாக்கியதால் முகம் மற்றும் உடலில் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனை அவதானித்த குடும்பஸ்தரின் மனைவி , இரக்கம் பார்த்து திருடனை இளைஞர்களிடமிருந்து விடுவித்து அனுப்பியுள்ளார்.
பிடிபட்ட கள்ளனை பொலிஸ் நிலையம் கொண்டு செல்வதற்கு ஆட்டோவுடன் வந்த குடும்பஸ்தர், கள்ளனை மனைவி விட்டுவிட்டதை அறிந்து கடும் கோபமடைந்து மனைவியை தாக்கியுள்ளார்.
இந்நிலையில் குடும்பஸ்தரின் கடும் கோபத்தை கண்ட இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து, அவர் கொண்டு வந்த ஆட்டோவிலேயே அவரை ஏற்றிக் கொண்டு வீடு வரை கொண்டு சென்று விட்டதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment