Header Ads



மனைவியைக் கடத்திய கணவன்


குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த திருமணமான இளம் பெண் ஒருவரை பலரது உதவியுடன் அவரது கணவர் கடத்திச் சென்றுள்ளார்.


அண்மையில் கணவனை விட்டு பிரிந்த 18 வயதுடைய பெண் சிலாபம் மனுவங்கமவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். வீட்டிற்கு விரைந்த அவரது கணவர் மற்றும் ஐந்து பேர் கொண்ட குழுவினர் பெண்ணை வலுக்கட்டாயமாக வேனில் தள்ளிவிட்டு வேகமாக சென்றுள்ளனர். தடுக்க வந்த அவரது தாயை அவர்கள் தாக்கியுள்ளனர்.


விசாரணையில் அவர் சிலாபத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்ததாகவும், பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்த போது 19 வயதுடைய இளைஞனைச் சந்தித்ததாகவும் தெரிய வந்துள்ளது. அவருடன் சென்று சிறிது காலம் தம்புள்ளை பிரதேசத்தில் வசித்து வந்த பெண் , கணவரின் தொல்லை தாங்க முடியாமல் அண்மையில் வீடு திரும்பியுள்ளார்.


சம்பவத்தின் போது அவரது தாய் மாத்திரமே வீட்டில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.