வாழைப்பழங்களின் விலை சடுதியாக குறைவடைந்தது
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாட மக்கள் தற்போது தயாராகி வரும் நிலையில், சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக குறைந்துள்ளது.
இதற்கமைய, வாழைப்பழங்களின் விலையும் சந்தையில் சடுதியாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் சீனி வாழைப்பழம் மற்றும் புளிப்பு வாழைப்பழம் 150 ரூபாவாக குறைந்துள்ளது.
அத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 120 ரூபாவாக அதிகரித்த தேங்காய் ஒன்றின் விலையும் 90 ரூபாவாக குறைந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment