எப்போது பல்டி அடிப்பார்..?
நாட்டைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நான் மொட்டுக் கட்சியை விட்டுச் செல்வேன். அதுவரை இந்தக் கட்சியில்தான் இருப்பேன்" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (26.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "நான் எப்போதும் மொட்டுக் கட்சிதான். என்னை அம்பாறையில் இருந்து வந்து கொழும்பில் போட்டியிடுமாறு கோட்டாபயதான் அழைத்தார். 3 இலட்சத்து 28 ஆயிரம் வாக்குகளைக் கொழும்பு மக்கள் எனக்கு வழங்கி என்னை வெற்றி பெற வைத்துள்ளனர்.
எந்தக் கட்சியிலும் வீழ்ச்சி - எழுச்சி என்ற இரண்டும் உண்டு. நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி பின்னடைவைச் சந்திக்கும்போது அதில் இருந்து விலகுவது சரியில்லை.
நாட்டின் பாதுகாப்புக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அல்லது நாட்டைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நான் மொட்டுக் கட்சியை விட்டுச் செல்வேன். அதுவரை இந்தக் கட்சியில்தான் இருப்பேன்.
அதனால்தான் நான் இன்றும் மொட்டுக் கட்சியில் உள்ளேன். மொட்டு கட்சியின் ஆட்சிதான் இப்போதும் தொடர்கின்றது.
தலைமைத்துவத்தில் மாத்திரம்தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment