Header Ads



இலங்கை குரங்குகளை சீனாவுக்கு அனுப்பமுன் செய்ய வேண்டிய பணிகள்


இலங்கையின் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது தொடர்பான ஆய்வுக்காக 4 அமைச்சுக்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


இந்தக் குழுவில் வனவிலங்கு, நீதி, பெருந்தோட்டங்கள் மற்றும் விவசாய அமைச்சுக்களின் அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர்.


இலங்கையில் உள்ள குரங்குகளை சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளுக்கு வழங்குமாறு சீன பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது.


இது சமூகங்களில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயன்முறை எப்படி மேற்கொள்ளப்படும் என்பது குறித்து இதுவரை சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.


இதன்படி, இலங்கையின் குரங்குகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முன்னர் முறையான கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments

Powered by Blogger.