கனடாவில் பள்ளிவாசலுக்கு சென்றவர்களை, அச்சுறுத்திய தமிழர் கைது
அத்துடன், குறித்த நபர் வழிபாட்டாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் மற்றும் மத அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் டொராண்டோவை சேர்ந்த ஷரன் கருணாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், வழிபாட்டாளர்களில் ஒருவரை நேரடியாக வாகனத்தை மோதச் செய்யும் வகையில் அச்சுறுத்தியதுடன், மத அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
ஏப்ரல் 6 ஆம் திகதி மார்க்கம், டெனிசன் வீதியில் உள்ள மசூதியில் ஏற்பட்ட குழப்பத்திற்கான அழைப்புக்கு பதிலளித்ததாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து, அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
நள்ளிரவுக்குப் பிறகு, ஏப்ரல் 7 ஆம் திகதி, யோர்க் பிராந்திய பொலிஸார், உளவுப் பிரிவு மற்றும் வெறுப்புக் குற்றப் பிரிவு ஆகியவற்றின் உதவியுடன் சந்தேக நபரை டொராண்டோவில் வைத்து கைது செய்தனர்.
சந்தேக நபருக்கு எதிராக மிரட்டல் விடுத்தமை, ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தியமை மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், கருணாகரன் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 11 ஆம் திகதி நியூமார்க்கெட் நகரில் உள்ள ஒன்ராறியோ சுப்ரீயர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி - oruvan
இந்த மத துவேசியின் இழி செயலைக்கண்டித்து கனடாவில் உள்ள அத்தனை முஸ்லிம்களும் பொலிஸில் முறைப்பாடு செய்து அவனை நிரந்த சிறையில் அடைக்க வேண்டும். இது போன்ற செயலை பல்லின மக்கள் வாழும் கனடாவில் அனுமதிக்கவே கூடாது.
ReplyDelete