Header Ads



புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பன்மடங்கு மோசமானது


- செந்தூரன் பிரதீபன் -


“தற்போது உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு மேலாக உள்ள பன்மடங்கு மோசமான சட்டமாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் காணப்படுகின்றது” என்று, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகாபதி சற்குணநாதன் தெரிவித்தார்.


“பொலிஸ் நிலையத்தில் வழங்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஆதாரமாக வழக்கு தொடர்ந்தால் அதை பாவிக்க முடியும். இதனால்தான் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்ட பலர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர்” என்றும் சுட்டிக்காட்டினார்.


சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மற்றும் பொது அமைப்புகள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையிலான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்றது.


அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,  


“பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் இராணுவத்துக்கு மிகவும் பலத்தை வழங்குகின்றது.  இராணுவ கைது செய்வதற்கு உரிமையை வழங்குகின்றது, ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்துவதற்கு உரிமை வழங்குகின்றது.


அத்துடன் தடுப்பணை, தற்போது உள்ள சரத்தின் படி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்க முடியும், தற்போது உள்ள புதுச் சட்டம், ஜனாதிபதிக்கான அதிகாரத்தில் மேலும் மக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு மீது தடை விதிக்கின்றது.


அதனை வருத்தமானியில் பிரசுரிக்க முடியும் அது நீண்ட காலத்துக்கு தொடர்ச்சியாக வர்த்தமானி மூலம் பிரசுரிக்க முடியும். ஒரு நிறுவனம் அல்லது ஒரு குழுவினை, தடை செய்யப்பட்ட அமைப்பாக தீர்மானிக்க முடியும் அத்துடன் வர்த்தமானியில் வெளியிட முடியும்.


அதற்கு பொலிஸ் அதிபர் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. உண்மையில் இந்த சட்டம் நீதித்துறையின் ஏற்பாடுகள் அன்றி காணப்படுகின்றது” என்றார்.

No comments

Powered by Blogger.