Header Ads



தொலைப்பேசியை பார்த்தவாறே பிரியாணியை உண்டவரின் நிலை


தமிழகத்தின் சாத்தான்குளம் பகுதியிலிருந்த ஒரு கடையில் ஒரு நபர் பிரியாணி ஒன்றினை ஓர்டர் செய்துள்ளார்.


பின்பு பசி மயக்கத்தில் தொலைப்பேசியை பார்த்தவாறே பிரியாணியை ஒரு கட்டு கட்டிவிட்டிருக்கிறார் .


மேலும் பிரியாணியை முழுவதும் உண்டுவிட்டு இலையின் ஓரத்திலிருந்த மிகுதியான சிக்கன் துண்டுகளையும் சாப்பிட்டுள்ளார்.


அங்குதான் இருந்தது வேடிக்கையே,அவர் உண்ட பிரியாணியோடு வேகவைக்கப்பட்ட பூரானொன்றும் இருந்துள்ளது.


இதனைக்கண்டு ஒரு பருக்கைக்கூட மிச்சம் வைக்காமல் உண்டுவிட்டோமே என ஆச்சரியம் கலந்த பயத்தோடு இலையில் இருந்த பூரானை தனது தொலைப்பேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.


உடனே கடைக்காரரரை கூப்பிட்டு காட்டியபோது கடை ஊழியர் எந்தவொரு முகபாவனையும் செய்யாது சாதாரணமாக தட்டிலிருந்த கழிவுகளை கொட்டிவிட்டு சென்றுள்ளார்.


பின் வாடிக்கையாளரிடம் நீங்கள் உண்ட பிரியாணிக்கு பணம் வேண்டாம் என கடை ஊழியர் கூறியுள்ளார்.


ஆனால் அவரோ நான் பிரியாணியை முழுமையாக உண்டேன் அதற்கு பணம் வாங்கிக்கொள்ளுங்கள் ஆனால் இனிமேல் இதுபோல கவனக்குறைவாக உணவு தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்காதீர்கள் என கூறி பணம் வழங்கிவிட்டு சென்றுள்ளார்.   


No comments

Powered by Blogger.