Header Ads



கொழும்பில் திடீரென மின்தடை


மருதானை துணை மின்நிலைய மின் கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள பல பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


மருதானை துணை மின்நிலையத்தில் கேபிள் வெடித்ததனால் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.


கொலன்னாவையில் உள்ள 132 KV துணை மின்நிலையத்திலும் கேபிள் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், கொழும்பு 4, 5 மற்றும் 7 ஆகிய இடங்களில் தற்போது மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.



No comments

Powered by Blogger.