அமெரிக்க கடற்படை கப்பல், திருகோணமலையில் நங்கூரமிட்டது (படங்கள்)
அமெரிக்காவின் யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக், என்ற கடற்படையின் போக்குவரத்து கப்பல் நேற்று (08) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
இது, அமெரிக்க கடற்படை கட்டளையின் விரைவுப் போக்குவரத்துக் கப்பல் ஆகும். துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள், உள்-திரையரங்கு மற்றும் போக்குவரத்தை வழங்கும் திறன் கொண்ட இந்த கப்பலில் 1200 கடல் மைல் தூரத்திற்கு 600 தொன் உபகரணங்களை எடுத்துச் செல்ல முடியும்.
இதன் சராசரி வேகம் மணிக்கு 25 கடல் மைல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பலுக்காக இந்த கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எரி பொருள் நிரப்ப வந்திருக்கின்றது என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு குட்டு குட்டவந்திருக்கின்றது. திருகோணமலையில் அமெரிக்காவின் ஒரு இராணுவப்படைத் தளத்தை அமைக்கும் இரகசிய திட்டம் மிகவும் சூட்சுமமாக நடைபெற்று வருகின்றது. அதற்கு தற்போதைய அரசாங்கம் முழு உதவியையைும் இரு கரம் நீட்டி வழங்கிக் கொண்டிருக்கின்றது. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அமெரிக்காவின் உதவிக்கு திருகோணமலைத் துறைமுகத்தை தாரை வார்க்கும் நடவடிக்கைகள் திரைமறைவில் நடைபெறுகின்றன.அதற்கு நாட்டில் பொருளாதார முன்னேற்றம். அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா பலமடைந்து சக்தி பெறுதல், பொருட்களின் விலை குறைவு, பொருளாதார ஸ்திரத்தை நோக்கிய இலங்கையின் நகர்வு உலகில் ஈடு இணையற்ற சனாதிபதி ரணில் என பல வார்த்தைப் பிரயோகங்கள் கொண்ட நாடகம் சிறப்பாக அரங்கேருகின்றது. 1948 ஆகும் போது இலங்கை எல்லாத்துறைகளிலும் சிங்கப்பூரை மிகைக்குமாம். அப் போது இந்தக் கொள்ளைக்கூட்டம் நரகத்தில் ஹவுஸ்புல் நிலைமையில் இருக்கும்.
ReplyDelete