Header Ads



“நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" - பாப்பரசர்


சுவாச நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மூன்று நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ், “நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என்று கேலி செய்தவாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.


வைத்தியசாலையில் இருந்து சனிக்கிழமை (01) காரில் வெளியேறிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர், சிரிப்புடன் கைகளை அசைத்தவாறு சென்றதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டன.


கடந்த புதன்கிழமையன்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 86 வயதான பாப்பரசர், ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.


பின்னர், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவரது சிரமத்துக்கு மூச்சுக்குழாய் அழற்சியே காரணம் என்று கண்டறியப்பட்டது.


அவரது சமீபத்திய பரிசோதனையின் முடிவுகள் வெளியான பின்னர், சனிக்கிழமையன்று பாப்பரசர் விடுவிக்கப்படுவார் என்று வத்திக்கான் முன்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், வைத்தியசாலையில் இருந்து வெளியேறுகையில் "நான் பயப்படவில்லை, நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்" என்று கேலிசெய்த அவர், சிரித்து கையசைத்தவாறு காரில் சென்றதாக அந்த ஊடகங்கள் விவரித்தன.

No comments

Powered by Blogger.