Header Ads



இரகசியங்களை அம்பலப்படுத்தப் போகும் வீரவன்ச


காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் உள்ள இரகசியங்களை அம்பலப்படுத்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் அவதானமாக ஆராய்ந்து தகவல்களை சேகரித்து நூல் ஒன்று எழுதப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.


இந்த வாரம் புத்தகம் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


காலிமுகத்திடல் போராட்டம் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக நிர்ப்பந்தித்தது எனவும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.


காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சில செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னணியில் உள்ள இரகசியங்களை வெளிப்படுத்தத் தவறினால் எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமைக்கு வழிவகுக்கும் எனவும் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மக்களை ஏமாற்றி படுதோல்வியடைந்து பொதுமக்களால் ஒதுக்கப்பட்ட இடியட் அரசியல்வாதிகளுக்கு இனி பொதுமக்களிடம் இடமில்லை. இவர்கள் எதையாவது உளரி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சி ஏற்கனவே பொதுமக்கள் நிராகரித்துவிட்டனர்.

    ReplyDelete

Powered by Blogger.