இலங்கை அரசாங்கம் தாக்கல் செய்த மனு, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி
நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட நிறுவனம் தாக்கல் செய்த நகர்த்தல் மனுவே நிராகரிக்கப்பட்டது.
இலங்கை அரசாங்கம் உடனடியாக நிலுவைத் தொகையை செலுத்த வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்காக வழக்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறையாண்மைப் பத்திரங்களின் பதிவுதாரர் செடே அன்ட் கோ என்பதால் ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தனது மனுவில் குறிப்பிட்ட போதும், வங்கிக்கு அதிகாரம் இருப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கு, 2022ஆம் ஜூலை 25ஆம் திகதி முதிர்ச்சியடைந்த 250 மில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரங்களை 5.875 சதவீத வட்டியில் செலுத்த வேண்டியிருந்தது.
இலங்கைக்கு வழங்கிய சர்வதேச இறையாண்மை பத்திரங்களின் முழுத் தொகையையும் ஜூலை 25 ஆம் திகதிக்குள் வட்டியுடன் செலுத்துமாறு உத்தரவிடக் கோரியே ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்திருந்தது.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் போது உள்ளூர் வங்கிகளின் இறையாண்மைப் பத்திரங்கள் குறித்து கவனம் செலுத்தத் தவறிவிட்டதாகவும் இது, இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளால் திட்டமிடப்பட்ட செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூர் வங்கிகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் வைத்திருக்கும் இறையாண்மைப் பத்திரங்கள் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டதாக வங்கி குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வருடத்துக்கு கோடான கோடி டொலர்களை அரசாங்கம் செலவு செய்து இலங்கை தூதரகத்தை நியூயோர்கிலும், கொன்சியூலர் காரியாலயங்களை அமெரிக்காவின் பல நகரங்களிலும் நிறுவியிருக்கின்றது. அங்கு பணியாற்றும் இலங்கைத்தூதுவர் உற்பட அதிகாரிகளின் கடமை இலங்கையின் கொடுகடன்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் சிறந்த சட்ட ஆலோசனை நிறுவனங்களை அரசாங்கத்துக்கு அறிமுகப்படுத்துவது அவர்களின் கடமை. ஆனால் அங்குள்ள அதிகாரிகள் பத்தாயிரம் பதினையாயிரம் டொலர்கள் மாதாந்த சம்பளத்தை இலங்கை பொதுமக்களின் பணத்தை அனுபவித்துக் கொண்டு சுகபோகத்தில் குடியிலும் மாதுவிலும் மூழ்கியிருப்பதைத்தவிர உருப்படியாக எதனையும் செய்வதில்லை. அதைத்தான் மேலே உள்ள அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகின்றது. ஏ.ஸீ.எஸ் ஹமீத் வௌிநாட்டு அமைச்சராக இருந்த காலமாக இருந்திருந்தால் அத்தனை அதிகாரிகளையும், தூதுவர் உற்பட உடனடியாக இலங்கைக்கு திருப்பியழைத்திருப்பார். ஆனால் அந்த அளவு முழுகெலும்பு பலமுள்ள அமைச்சர்கள் இப்போது இல்லை. கோர்ட்டையும் சூட்டையும் கலர் காட்டி சனாதிபதியின் வீணைக்கு நடனமாடும் அமைச்சர்களுக்கு அதன் பாரதூரம்பற்றி விளங்கிக் கொள்ளவும் மூளை இல்லை என்பது இலங்கைக்கு பெரும் நஷ்டமாகும். அமெரிக்க வங்கியிடமிருந்து பெற்ற கடன்கள் முழுக்க முழுக்க ராஜபக்ஸ குடும்பத்தின் சுகபோகத்துக்குப் பயன்படுத்தியதே அன்றி அவற்றால் நாட்டுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என ஆய்வுகள் கூறுகின்றன. அப்படியானால் அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்துமாறு ராஜபக்ஸ கூட்டத்தை பலவந்தப்படுத்த வேண்டும். அதற்கு முதுகெழும்பு உள்ள சனாதிபதி வரவேண்டும். இவை அனைத்தும் தற்போது வெறும் பகல்கனவுகள் மட்டும்தான். இறுதியில் கடனையும், வட்டியையும் அடுத்த தரப்பின் வழக்குச் செலவுகளையும் செலுத்திவிட்டு அரசாங்கம் அதனை ஈடு செய்ய கோடான கோடி பணத்தையும் பொதுமக்களிடமிருந்து மேலதிக வரியாகவும், செஸ், வாட், என்ற பெயரில் சுரண்ட வேண்டும்.இறுதியில் அப்பாவி பொதுமக்கள் செய்யாத குற்றத்துக்காக ஏன் இந்தப் பணத்தைச் செலுத்த வேண்டும் என திருப்பி அரசாங்கத்தைக் கேட்கும் அளவுக்கும் அவர்கள் இல்லை.
ReplyDelete