Header Ads



ரணிலின் வீட்டிற்கு தீ -- சந்தேக நபராக ஸ்ரீரங்கா


சாட்சியாளர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஜே.ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தன்னிப்பட்ட இல்லத்திற்கு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.


கடந்த வருடம் ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று தீயிட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.


அதன்படி, அவரை எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்தார்.


2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாட்சியாளர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. oruvan

No comments

Powered by Blogger.