புலிகளுக்கு புத்துயிர் அளிக்க முயற்சியா..?
கடந்த வியழக்கிழமை சென்னையின் 8 இடங்களில் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய சோதனையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன், 82 இலட்சம் ரூபாய் பணம், 300 கிராம் தங்கம், 1,000 சிங்கப்பூர் டொலர்கள் மற்றும் 10 கிலோ கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன.
என்ஐஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் இவர் கைதாகினார்.
2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்து ஒன்பது பேரை என்ஐஏ கைது செய்த நிலையில், இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் போதைப்பொருள் வியாபாரி ஹாஜி சலீமுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், 300 கிலோ ஹெராயின், ஏகே 47 ரக துப்பாக்கிகள் ஐந்து மற்றும் ஆயிரம் 9 மில்லி மீற்றர் வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற சம்பவத்தில் ஹாஜி சலீமுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது
குறித்த படகை கேரளாவின் விழிஞ்சம் துறைமுகம் அருகே இந்திய பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
(தமிழ் மிரர்)
Post a Comment