Header Ads



ஜப்பான் செல்லும் கனவில் உள்ளவர்களா நீங்கள்..?


இலங்கை அரசாங்கமும் ஜப்பானின் முன்னணி வர்த்தகக் குழுவான பசோனா குழுமமும் ஜப்பானில் உள்ள இலங்கைப் பணியாளர்களுக்கான தொழில் வாய்ப்புகள், மனித வள மேம்பாடு, ஜப்பானிய முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவருதல் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.


தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கும் பசோனா குழுமத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை பணியாளர்களை வேலை வாய்ப்புகளுக்காக ஆட்சேர்ப்பு செய்ய விரும்பும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு பசோனா குழுமம் தனது ஆதரவை வழங்குகிறது. மேலும், ஜப்பானில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு Pasona Group செயல்படுகிறது. இந்த முதலீட்டு ஒப்பந்தத்தின்படி ஜப்பானிய முதலீட்டாளர்களை கவரும் வகையில் முதலீட்டு மாநாடுகள் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை பசோனா குழுமம் நடத்த உள்ளது.


அதேவேளை, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, சுற்றுலாத்துறையில் பணியாற்றும் நிபுணர்களின் திறன் மற்றும் பயிற்சியை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதுடன், ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.