Header Ads



இனியாவது A/L பரீட்சை விடைத்தாள்களை திருத்துவார்களா..?


கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் மதிப்பீட்டாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2,000 ரூபா கொடுப்பனவாக செலுத்துவதற்கும் போக்குவரத்து கொடுப்பனவாக 2,900 ரூபா செலுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.


இந்நிலையில் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபடும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.


இதன்போது அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ள கொள்கையளவிலான தீர்மானத்தின் பிரகாரம் திறைசேரி மற்றும் தேசிய சம்பள ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த கொடுப்பனவை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.