சஜித் தொடர்பில் பௌஸி விடுத்துள்ள கோரிக்கை
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி தொடர்பிலான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யோசனை மீதான வாக்கெடுப்பு கடந்த 28 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சக்தி இதனை ஆதரிப்பதாக அறிவித்த போதும் வாக்கெடுப்பில் பங்கேற்காத நிலையில் ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி யோசனைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் பௌசியிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லுமாறு நான் தான் முதலில் கூறினேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார்.
எனினும், நாடு மற்றும் இளைஞர்களின் நலன்களில் அக்கறையின்றி வாக்களிக்காமல் அவர் சென்றுவிட்டார்.
எனினும், நாட்டின் நலன்கருதி அதனை நான் ஆதரித்தேன். ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் பயன் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment