ஈஸ்டர் தாக்குதலுக்கு உண்மையில் யார் காரணம்...?
நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது, இரு சகோதரர்களை இழந்த பிரிட்டிஷ் பிரஜை, இந்த சம்பவத்துக்கு யார் உண்மையில் காரணம் என்பதை தான் அறிய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தனக்கும் தனது குடும்பத்துக்கும்; ஒருபோதும் விடைகள் கிடைக்காது என தெரிவித்துள்ள டேவிட் லின்சே, சங்கிரி லா ஹோட்டல் குண்டுவெடிப்பில் டேனியல் மற்றும் அமெலி லின்சி சகோதரர்கள் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில் உயிரிழந்த தனது சகோதரங்களின் பெயரால் இலங்கை மக்களிற்கு ஏதாவது செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எனவே 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நான் உண்மையை அறிய விரும்புகின்றேன் அவ்வளவுதான் நான் அரசியல்வாதியோ நீதிபதியோ இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முழுமையாக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்த அதுவரை எதிர்வுகூறல்கள் சாத்தியமில்லை எனவும் டேவிட் லின்சே, தெரிவித்துள்ளார்.
இந்த தன்னுடைய இரண்டு சகோதரர்களை கேடு கெட்ட அரசியல் நோக்கம் கொண்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்த இரண்டு ச கோதரர்களின் இழப்புக்கு யார் காரணம் எனக் கேட்கும் பிரிட்டிஷ் பிரஜையின் வேண்டுகோள் சாதாரண விடயமல்ல. உலகம் முழுவதும் கேட்கும் நியாயத்தின் ஒரு சிறு துளி மாத்திரம் தான். நியாயம் கேட்கும் கடல் நமதி சிறிய தீவைச் சுற்றி மட்டுமல்ல எமக்கு மேலும் கீழும் இருக்கின்றது. இந்த வேண்டுகோளை அரசாங்கம் மிகவும் பாரதூரமான வேண்டுகோளாக ஏற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் வரை இந்த சர்வதேச உலகாயதப் போராட்டம் தொடரும். இந்த கேள்விக்கு உரிய பதிலைக் கொடுக்கும் வரை ஆட்சியில் இருப்பவர்களும் இனி வரப் போகும் ஆட்சியாளர்களும் இந்த வேண்டுகோளை மிகவும் பாரதூரமாக கருதி நடவடிக்கை எடுத்து அரசியல் கொலைகாரர்களை சர்வதேச நீதிமன்றத்தில் இந்த குரல் அமைதியடைவதில்லை என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும்.
ReplyDelete