Header Ads



"குழந்தை வேண்டாம் என்றால், கவுண்டரில் வைக்கவும்"


பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு நான்கு வயதுக்குட்பட்ட கைக்குழந்தைகள் என்றும், மீதமுள்ளவர்கள் 4 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.


சில காரணங்களால் அவர்கள் விரும்பாத அல்லது தத்தெடுக்க முடியாத மூன்று மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் தனது குழந்தையினை குறிப்பிட்ட சாளரங்களில்/ கவுண்டரில் வைத்து விட்டு செல்ல முடியும் என்றும், அதற்காக அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் மாகாண நன்னடத்தை திணைக்களங்களின் மேற்பார்வையில் 379 குழந்தை பராமரிப்பு நிலையங்களில் சாளரங்களை நிறுவவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.


“..எந்த இடத்திலும் கைவிடப்பட்ட அல்லது திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளுக்கு மாகாண நன்னடத்தை திணைக்களத்தினால் தேவையான பராமரிப்பு வழங்கப்படுகிறது.


இது குறித்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகளை கையாள்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரங்களை வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளது.


கைவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுப்பது தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும்..” என பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.