கனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக தமிழ் இளைஞரின் மத அவதூறு - தமிழர் பேரவையின் பிரதிபலிப்பு
கனடாவில் மசூதி ஒன்றின் வழிபாட்டாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கனடியத் தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஒன்ராறியோவில் உள்ள மசூதியின் வழிபாட்டாளர்கள் மீது அச்சுறுத்தல்கள் மற்றும் மத அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக குற்றம் சுமத்தி டொராண்டோவை சேர்ந்த ஷரன் கருணாகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் வழிபாட்டாளர்களில் ஒருவரை நேரடியாக வாகனத்தை மோதச் செய்யும் வகையில் அச்சுறுத்தியதுடன், மத அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கனடியத் தமிழர் பேரவை கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அத்துடன், வெறுப்புச் செயல்களுக்கு எமது சமூகத்தில் இடமில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment