நுவரெலியா செல்பவர்களுக்கு எச்சரிக்கை
நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது.
மழையுடனான காலநிலையுடன் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல கினிகத்தேனை, கடவல, வட்டவளை உள்ளிட்ட பகுதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் குடாகம, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளயார், லிந்துலை, சமர்செட், ரதல்ல் நானுஓயா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனால். குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment