தென் கொரியாவில் அநுரகுமார, சிங்கக் கொடியுடன் திரண்ட ஆதரவாளர்கள் (படங்கள்)
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தென்கொரியாவில் இலங்கை சமூகத்தினர் மத்தியில் உரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக தென்கொரியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள திசாநாயக்கவை, இன்சியான் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை குழுவினர்கள் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் திசாநாயக்கவை வரவேற்கும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் கொரிய கிளையின் பதாகை ஒன்று விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதி தென் கொரியாவில் உள்ள இலங்கை சமூகத்தினர் மத்தியில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உரையாற்ற உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Post a Comment