Header Ads



காதலன் கடைக்குச் செல்ல, வீதியில் காத்திருந்த யுவதிக்கு நேர்ந்த கதி


கொழும்பு - கண்டி செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதி உயிரிழந்துள்ளார்.


அவர் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இவர்கள் இருவரும் நேற்று வரகாபொல உடுவக்க நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்று, பின்னர் வீடு திரும்பும் போது பட்டலிய கஜுகம என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, காதலன் கடைக்குச் சென்றுள்ளார்.


இதன்போது குறித்த பெண் மோட்டார் சைக்கிள் அருகே இருந்த போது, அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த இளம்பெண்ணை மோதிய நிலையில் பேருந்து அருகில் இருந்த வடிகாலில் விழுந்து நின்றுள்ளது.


இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


குறித்த பஸ் இராணுவத்திற்கு வாடகைக்கு விடப்பட்டதுடன் அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


No comments

Powered by Blogger.