Header Ads



நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்,


அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் காரணமாக 700 மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் உழைக்கும் போதே வரி அறவீடு போன்ற பல காரணிகளினால் இவ்வாறு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளிறேி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்களில் நிபுணத்துவ மருத்துவர்களும் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.


நாடு முழுவதிலும் மந்த போசனை நிலவி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டு வரும் நிலையில், அனுராதபுரம் போதான வைத்தியசாலையின் சிறுவர் நோய் பிரிவில் கடமையாற்றிய நான்கு மருத்துவர்களும் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.


முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிச் செல்லும் நிலைமை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


போராட்டங்களை நடாத்த வேண்டிய அவசியமில்லை என்ற போதிலும் தமது கோரிக்கைகளுக்கு செவி மடுக்காவிட்டால் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. அநுராதபுர வைத்தியசாலையில் பணிபுரிந்த விசேட சிறுவர் வைத்தியர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதனால் எந்தப் பிரச்சினையுமில்லை. அதுமட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்து டாக்டர்களும் வௌியேறியபோதிலும், அனைத்து வைத்தியசாலைகளும் மூடப்பட்ட போதிலும் எந்தப்பிரச்சினையுமில்லை. அதனால் அரசாங்கம் கவிழும் என்ற நிலைவராமல் பார்த்துக் கொள்ள தேவையான ஏற்பாடுகளை ரணில் செய்து விட்டார். எனவே, 1948 ஆண்டுவரை பொருளாதாரம் முன்னேற்றமடைந்து நிரந்தர சனாதிபதியாக 1948வரை இலங்கையின் ஏக சனாதிபதியாக ரணில் இருப்பார். அதற்கு தடைகள், இடையூறுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வதுதான் பாராளுமன்றத்தின் கடமை.அது சரியாக நிறைவேறினால் பிரச்சினை முடிந்துவிட்டது. எனவே டாக்டர்கள் வௌியேறுவது, மூளைசாலிகள் வௌியேற்றம் எதுவும் அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ලොකයේ උතුමි රට සිරිලංකා!

    ReplyDelete

Powered by Blogger.